சிம்பு- வெற்றி மாறன் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு

சிம்பு அடுத்ததாக STR49,50, 51 ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.
சிம்பு- வெற்றி மாறன் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு
Published on

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தின சிம்புவின் கதாப்பாத்திரம் பலரால் பாராட்டை பெற்று வருகிறது.

சிம்பு அடுத்ததாக STR49,50, 51 ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் வெற்றி மாறன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இது தற்போது உறுதியாகியுள்ளது.

இப்படம் வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், சிம்பு- வெற்றி மாறன் கூட்டணியில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 16ம் தேதி எண்ணூரில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com