‘சிலந்தி-2’.. மீண்டும் இணையும் மாளவிகா மேனன் - ஆதிராஜன் கூட்டணி

'லோகா', 'காந்தாரா' போன்ற படங்களில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் இந்த படத்திலும் 30 நிமிடத்திற்கும் மேல் இருக்கிறது
‘சிலந்தி-2’.. மீண்டும் இணையும்  மாளவிகா மேனன் - ஆதிராஜன் கூட்டணி
Published on

2008 ஆம் ஆண்டு வெளியான சிலந்தி படத்தின் பாகம் இரண்டை ‘சிலந்தி-2’ என இயக்குனர் ஆதிராஜன் இயக்கவுள்ளார்.

ஆதிராஜன் கூறுகையில், ‘சிலந்தி-2’ படம் எனக்கு வாய்த்த 5 வது படமாகும். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி என 6 மொழிகளில் மிரட்டல் திரில்லர் படமாக உருவாக இருக்கிறது.

இதன் படப்பிடிப்பு கம்போடியா, வியட்நாம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது. 'லோகா', 'காந்தாரா' போன்ற படங்களில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் இந்த படத்திலும் 30 நிமிடத்திற்கும் மேல் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சிறந்த முறையில் இயக்கி வெளியிடவுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனரான ஆதிராஜன் இயக்கத்தில் சிலந்தி என்ற படத்தில் முன்னா, மாளவிகா மற்றும் ரியாஸ்கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இசையமைப்பாளர் நீல் முகர்ஜி மூலம் வெளியிடப்பட்டது.

மலையாள முன்னணி நடிகையான மாளவிகா மேனன் சில ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்களிலும் முக்கிய பங்கு வகிக்கிறார்.'இவன் வேற மாதிரி', 'விழா', 'பிரம்மன்', 'வெத்துவேட்டு', 'நிஜமா, நிழலா', 'பேய் மாமா' போன்ற படங்களில் சிறந்த நட்சத்திரமாக விளங்கி வருகிறார்.

தமிழில் கடைசி படமாக 2022 ஆம் ஆண்டு ஆதிராஜன் இயக்கத்தில் 'அருவா சண்டை' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மாளவிகா மேனன்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்து வெளியிட்டது. இது ஒரு விதமான திகில் படமாகும். மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இதை போன்றே ‘சிலந்தி-2’ படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்கிறேன் என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com