Youth | "அசத்திட்டீங்க தம்பி" யூத் படத்தை பார்த்துவிட்டு கென் மற்றும் படக்குழுவை பாராட்டிய நடிகர் சிலம்பரசன்

யூத் திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
Youth | "அசத்திட்டீங்க தம்பி" யூத் படத்தை பார்த்துவிட்டு கென் மற்றும் படக்குழுவை பாராட்டிய நடிகர் சிலம்பரசன்
Published on

`அசுரன்', `விடுதலை 2' திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் கென் கருணாஸ். நடிப்பை கடந்து கென் கருணாஸ் "யூத்" திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படம் மார்ச் 19-ஆம் தேதி வெளியாகிறது.

யூத் திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். `யூத்' திரைப்படத்தை பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரித்துள்ளார். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம், பள்ளிக்கூட பின்னணியில் உருவாகியுள்ளது.

நேற்று (மார்ச் 19) வெளியான நிலையில், யூத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், யூத் படத்தை பார்த்த நடிகர் சிலம்பரசன் படக்குழுவை வாழ்த்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், "யூத் திரைப்படம் புதிதாகவும், துடிப்பாகவும், உணர்வுபூர்வமாகவும் இருக்கிறது. என்னவொரு அருமையான திரைப்படம்! இன்றைய தலைமுறையினரின் மனதோடு ஆழமாக ஒன்றிப்போகும் ஒரு கதை இது.

கென் கருணாஸ்-இன் மிகச்சிறந்த நடிப்பு- தம்பி, நீங்கள் உண்மையிலேயே அசத்திவிட்டீர்கள். இவ்வளவு இளம் வயதிலேயே நடித்தும், இயக்கியும், படத்தை இவ்வளவு சுவாரஸ்யமாக உருவாக்கி இருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

சுராஜ் சார் மற்றும் தேவதர்ஷினி மேடம் ஆகியோருடன் நீங்கள் நடித்த காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. அனிஷ்மா, மீனாக்ஷி மற்றும் பிரயான்ஷி யாதவ் இந்தப் படத்திற்கு பெரும் துடிப்பை சேர்த்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் குமார், உங்கள் இசை படத்தின் ஒவ்வொரு தருணத்தையும் மிக அழகாக மெருகேற்றியுள்ளது. தயாரிப்பாளர் கருப்பையா சி ராம், இத்தகைய துடிப்பான மற்றும் தரமான படைப்புகளுக்கு நீங்கள் ஆதரவளிப்பதைப் பார்ப்பது பெருமையாக இருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்," என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com