'லெனின் பாண்டியன்' படத்தில் ஸ்ரிதா ராவ் கதாபாத்திரம் குறித்து வெளியான போஸ்டர்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா இப்படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
'லெனின் பாண்டியன்' படத்தில் ஸ்ரிதா ராவ் கதாபாத்திரம் குறித்து வெளியான போஸ்டர்
Published on

டி.டி. பாலச்சந்திரன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் 'லெனின் பாண்டியன்'. நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் நாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில், இசையமைப்பாளர் கங்கை அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். 32 ஆண்டுகளுக்குப் பிறகு தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜனுடன் இளையராஜா இணையும் படம் இதுவாகும். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது. கிராமப்புற பின்னணியைக் கொண்ட ஆக்‌ஷன் கலந்த கதை, இதில் தர்ஷன் காவல் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா இப்படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

'லெனின் பாண்டியன்' படத்தில் நடித்து வரும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் குறித்து படக்குழு போஸ்டர் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நடிகை ஸ்ரிதா ராவ் கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் இப்படத்தில் அவரது கதாபாத்திரன் பெயர் பிரியா என்றும் படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com