நீண்ட இடைவெளிக்கு பிறகு சிக்மா மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஷிவ் பண்டிட்

சிக்மா திரைப்படம் ஜூலை 31-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சிக்மா மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஷிவ் பண்டிட்
Published on

2012-ம் ஆண்டு வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமான ஷிவ் பண்டிட். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷிவ் பண்டிட் தமிழ் சினிமாவில் மீண்டும் களமிறங்குகிறார்.

இதுகுறித்து அவர் கூறும் போது, “தமிழ் சினிமா எனக்கு மிகவும் நெருக்கமானது. லீலை மூலம் கிடைத்த அன்பை என்னால் மறக்கவே முடியாது.

சிக்மா மூலம் கோலிவுட்டில் எனது பயணத்தின் புதிய அத்தியாயம் தொடங்கும் என நம்புகிறேன். ஜேசன் சஞ்சய் போன்ற தெளிவான பார்வை கொண்ட இளம் இயக்குநருடன் பணியாற்றியது சிறப்பான அனுபவம்” என்றார்.

சுந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், யோக் ஜப்பி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமன் இசையமைப்பில், கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள “சிக்மா” திரைப்படம் ஜூலை 31-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com