Seyon | சேயோன் திரைப்படத்தின் புது வீடியோ வெளியீடு

சேயோன் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
Seyon | சேயோன் திரைப்படத்தின் புது வீடியோ வெளியீடு
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது ‘சேயோன்’ என்ற படத்தில் நடிக்கிறார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை ‘தாய் கிழவி’ திரைப்படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார்.

சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்சே நடிக்கிறார். மேலும் பால சரவணன் மற்றும் அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சேயோன் திரைப்படம் "விருமாண்டி" படம் போல கருமாத்தூர் தெய்வங்களை மையமாக வைத்து மதுரையில் நடக்கும் ஆக்ஷன், நகைச்சுவையுடன் கூடிய கிராமப்புற குடும்ப பொழுது போக்கு படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதத்தில் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருந்த நிலையில் சில காரணங்களால் மே மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், ‘சேயோன்’ படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியது. அக்டோபர் மாதம் ஆயுத பூஜைக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. படப்பிடிப்பு துவங்கியதை அடுத்து சேயோன் திரைப்படத்தின் பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com