கார்த்தி பிறந்தநாளை ஒட்டி விசேஷ போஸ்டர் வெளியிட்ட சர்தார் 2 படக்குழு!

இந்தப் படத்தின் வெளியீட்டின் போதே இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
கார்த்தி பிறந்தநாளை ஒட்டி விசேஷ போஸ்டர் வெளியிட்ட சர்தார் 2 படக்குழு!
Published on

நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை ஒட்டி சர்தார் 2 படக்குழு சார்பில் சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'சர்தார்.' இந்தப் படத்தின் வெளியீட்டின் போதே இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

சர்தார் திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வேக வேகமாக உருவானது. அதன்படி, சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது கார்த்தியின் பிறந்தநாளை ஒட்டி சிறப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.

சர்தார் 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு பணிகளையும், கலை இயக்குநராக ராஜீவன், சண்டை பயிற்சி திலீப் சுப்பராயன், படத்தொகுப்பு பணிகளை விஜய் வேலுக்குட்டி மேற்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com