தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா, 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படத்திற்குப் பிறகு தமிழில் படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்தார்.
பெரும்பாலும் தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் கவனம் செலுத்தி வந்த அவர், தற்போது சோனி லிவ் ஓடிடி தளத்துடன் இணைந்து ஒரு புதிய தமிழ் ப்ராஜெக்ட் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு 'மாஸ் கம்பேக்' கொடுக்க உள்ளார்.
முடிவை மாற்றிய ராஜ் நிடிமோரு..
சமந்தா நடிப்பில் அண்மையில் வெளியான 'மா இண்டி பங்காரம்' திரைப்படத்தின் ரிலீசுக்கு முன்பாக, அவர் சினிமாவிலிருந்து முற்றிலும் விலகிவிடலாம் என்று ஒரு அதிர்ச்சியான முடிவை எடுத்திருந்தார்.
ஆனால், அந்தப் படத்தின் கதை-தயாரிப்பாளரான ராஜ் நிடிமோரு தான் அவரை சமாதானப்படுத்தி, அந்தப் படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார்.
தியேட்டருக்கு ரசிகர்கள் வருவார்களா என்ற பயம் சமந்தாவுக்கு இருந்த நிலையில், படம் வெளியாகி தியேட்டர்களில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்துள்ளது.
ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தப்போகும் புதிய கூட்டணி..
தமிழில் 'கத்தி', 'தெறி', 'மெர்சல்', '24', 'சூப்பர் டீலக்ஸ்' என பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த சமந்தாவின் இந்த புதிய தமிழ் ப்ராஜெக்ட், ரசிகர்களை வியப்பிலும் ஆனந்தத்திலும் ஆழ்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருவதாக சோனி லிவ் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த ப்ராஜெக்ட் குறித்த முழு விவரங்கள் இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமந்தாவின் எமோஷனல் பதிவு..
இந்த புதிய கூட்டணி குறித்துப் பேசிய நடிகை சமந்தா, 'இந்த வருடம் எனக்குப் பல பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும், வாழ்க்கைப் பயணத்தை நம்பி புதிய தொடக்கங்களை வரவேற்கவும் பழகி இருக்கிறேன்.
இதைத்தொடந்து இந்த புதிய தமிழ் ப்ராஜெக்ட்டில் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் சுவாரஸ்யமான ஒன்றில் நாங்கள் உழைத்து வருகிறோம் அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆவலோடு காத்திருக்கிறோம்' விரைவில் தெரிய வரும் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.