நடிகை சமந்தா வீட்டில் புதுவரவு...!

சமந்தா சாதாரண வெள்ளை டி-ஷர்ட்டில் வயிறு சற்று பெரிதாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
Samantha-Raj to welcome first child in December
Published on

சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு தம்பதியினர், 2025 டிசம்பர் 1 அன்று கோயம்புத்தூரில் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டனர்.

இதையடுத்து நடிகை சமந்தா ரூத் பிரபு கதாநாயகியாக நடித்த தெலுங்கு படமான ‘மா இண்டி பங்காரம்’ நேற்று உலகெங்கிலும் வெளியானது.

இந்த படம் வெளியாகி வணிக ரீதியில் பெரும் வெற்றி பெற்று ரூ.12.80 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் மா இண்டி பங்காரம் திரைப்படம் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினருடன் இணைந்து சமந்தா கேக் வெட்டி கொண்டாடினார்.

நடிகை சமந்தா கர்ப்பம்:

அப்போது அந்த நிகழ்வில் சமந்தா ஒரு சாதாரண வெள்ளை டி-ஷர்ட்டில் வயிறு சற்று பெரிதாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதனைத் தொடர்ந்து அவர் கர்ப்பமாக இருக்கலாம் என்ற செய்தி வைரலாக பரவியது.

இந்த தம்பதிகள் சமீபத்தில் திருமலை கோவிலுக்கு சென்றபோது, சமந்தாவை அவரின் கணவர் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த காணொளிகள், யூகங்களுக்கு மேலும் வலு சேர்த்தது.

இந்நிலையில் நடிகை சமந்தாவின் கர்ப்பம் குறித்த செய்தி உண்மைதான் என அவரது செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த ஆண்டு டிசம்பரில் தம்பதியினருக்கு குழந்தை பிறக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com