காலையில் எழுந்ததும் செய்யக்கூடாதது என்ன?- சமந்தா சொல்லும் அறிவுரை

மெதுவாக சுவாசிப்பது உங்கள் வேகஸ் நரம்பை தூண்டி நீங்கள் பாதுகாப்பாக இருப்பதாக மூளைக்கு உணர்த்துகிறது.
காலையில் எழுந்ததும் செய்யக்கூடாதது என்ன?- சமந்தா சொல்லும் அறிவுரை
Published on

நடிகை சமந்தா சினிமா பணிகளில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர். இது மட்டுமின்றி உணவு, ஆரோக்கியம் குறித்து பல ‘டிப்ஸ்’களை தனது சமூக வலைதளபக்கங்களில் பகிர்ந்து பலருக்கு உத்வேகமாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தினமும் காலையில் எழுந்ததும் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

காலையில் எழுந்த உடன் கார்டிசோல் அளவு இயல்பாகவே அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் செல்போன்கள், மெயில் மற்றும் செய்திகளை பார்க்கும் போது மனஅழுத்தம் மேலும் அதிகரிக்கக் கூடும். எனவே காலை எழுந்த முதல் 1 மணி நேரத்திற்கு செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த 2 முதல் 5 நிமிடங்கள் அமைதியில் ஆழ்ந்த கவனமான சுவாச பயிற்சியில் ஈடுபட வேண்டும். இதை 21 நாட்களுக்கு முயற்சி செய்து பாருங்கள்.

இந்த பயிற்சி உங்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி அழற்சியை குறைக்க உதவுகிறதா என பாருங்கள். மெதுவாக சுவாசிப்பது உங்கள் வேகஸ் நரம்பை தூண்டி நீங்கள் பாதுகாப்பாக இருப்பதாக மூளைக்கு உணர்த்துகிறது. மேலும் மனஅழுத்தத்தில் உள்ள மூளையை விட பாதுகாப்பான மூளை கொழுப்பை எரித்து தன்னை சரி செய்து கொள்கிறது. சீரான ரத்த அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு அதிகாலையில் சூரிய ஒளியில் நிற்பது காலையில் ஒரு எளிய பானத்தை அருந்துவது, சமச்சீரான காலை உணவை உட்கொள்வது அவசியம். காலை 11 மணிக்கு முன்பு உங்கள் உடற்பயிற்சியை செய்யுங்கள்.

இன்று நீங்கள் எதை சாதிக்கப் போகிறீர்கள் என்பதை தீர்மானித்து கொள்ளுங்கள். அந்த ஒரு நோக்கத்துடன் சிந்தியுங்கள். இதுமட்டுமின்றி எழுதியும் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com