

வாரிசு பட இயக்குநர் வம்சி பைடிபைலி சல்மான் கானை வைத்து இயக்கும் புதிய படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன்மூலம் ஷாருக்கானின் 'ஜவான்' படத்திற்குப் பிறகு, மீண்டும் பாலிவுட்டில் நடிக்கிறார் நயன்தாரா. மேலும் சல்மான் கானுடன் நயன்தாரா நடிக்கும் முதல் படம் இதுவாகும்.
தில் ராஜுவின் தயாரிப்பில் உருவாகும் இப்படம் ஒரு பேன் இந்தியா ஆக்ஷன் திரைப்படமாக உருவாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே 2020-ஆம் ஆண்டு லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களுக்கிடையே நடந்த மோதலை மையமாகக் கொண்டு உருவாகி வரும் 'மாத்ருபூமி' என்ற படத்தில் சல்மான் கான் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சல்மான் கான் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.