சாய் பல்லவி - நாக சைதன்யா நடித்த தண்டேல் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் அறிவிப்பு

சாய் பல்லவி அடுத்ததாக தண்டேல் என்ற படத்தில் நடித்துள்ளார்.திரைப்படம் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாள மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
சாய் பல்லவி - நாக சைதன்யா நடித்த தண்டேல் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் அறிவிப்பு
Published on

அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சாய் பல்லவி அடுத்ததாக தண்டேல் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சந்து மொண்டேடி இயக்கியுள்ளார். படத்தின் கதாநாயகனாக நாக சைதன்யா நடித்துள்ளார். தண்டேல் படத்தில் சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா மீனவர்களாக நடித்துள்ளனர். குறிப்பிடத்தக்கது.

படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டுள்ளார். கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. திரைப்படம் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாள மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

படத்தின் பாடலான நமோ நம ஷிவாயா லிரிக் வீடியோ கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியிட்டு அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. தண்டேல் திரைப்படத்தின் டிரெய்லர் வரும் ஜனவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com