‘ஸ்மார்ட்போனில்’ இருந்து விலகி இருக்கிறேன்- சாய் அபயங்கர்

சமூக ஊடகங்களில் உங்களுக்கு தேவையானதும் தேவையில்லாததும் உள்ளன. அதனால்தான் சாதாரண போனை பயன்படுத்துகிறேன்.
‘ஸ்மார்ட்போனில்’ இருந்து விலகி இருக்கிறேன்- சாய் அபயங்கர்
Published on

தமிழ் திரை உலகில் குறுகிய கால கட்டத்தில் முன்னணி இசை அமைப்பாளராக உருவெடுத்திருப்பவர் சாய் அபயங்கர். பிரபல பாடகர்கள் திப்பு-ஹரிணி தம்பதியரின் மகனான சாய் அபயங்கர். தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில், இப்போது என்னிடம் 1000-க்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன. 6-ம் வகுப்பில் இருந்தே நான் அனைத்தையும் இயற்றி உள்ளேன். 60 வயதிற்கு பிறகு என் உடல் நலம் பாதிக்கப்பட்டால் நான் அந்த பாடல்களை பயன்படுத்துவேன். 1000 பாடல்களையும் பயன்படுத்துவேன் என்று சொல்லவில்லை. அவற்றுள் எது சிறந்ததோ அதை மட்டும் பயன்படுத்துவேன்.

சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருப்பதற்காக நான் ஒரு சாதாரண நோக்கியா செல்போனை பயன்படுத்துகிறேன். சமூக ஊடகங்களில் உங்களுக்கு தேவையானதும் தேவையில்லாததும் உள்ளன. அதனால்தான் சாதாரண போனை பயன்படுத்துகிறேன். இதில்தான் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அழைக்கின்றனர். பெரும்பாலும் ஸ்மார்ட்போனில் இருந்து விலகியே இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com