மீண்டும் திரையரங்குகளில் ஒலிக்கப்போகும் 'காதல் பிசாசே'... ரன் படத்தை காண ரெடியா!

காதல், ஆக்ஷனில் உருவான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
ரன் பட காட்சி
Published on: 

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் ‘பாட்ஷா’, ‘பாபா’, கமல்ஹாசனின் ‘வேட்டையாடு விளையாடு’, ‘ஆளவந்தான்’, விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரன்’, விஜயின் ‘சச்சின்’, சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’, தனுசின் ‘யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

இயக்குனர் லிங்குசாமி

அந்த வரிசையில், 23 ஆண்டுகளுக்கு பிறகு மாதவன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ‘ரன்’ திரைப்படம் புத்தம் புது பொலிவுடன் தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகாவில் ஏப்.24-ந்தேதி முதல் வெளியாகும் என இயக்குனர் லிங்குசாமி தெரிவித்து இருந்தார். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் படம் இதுவரை வெளியாகவில்லை.

ஜூலை 10-ல்

இந்த நிலையில், ‘ரன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, ‘ரன்’ திரைப்படம் வருகிற 10-ந்தேதி வெளியாகிறது. இதனால் மாதவன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

பாடல்கள் ஹிட்

கடந்த 2002-ம் ஆண்டில் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் இணைந்து நடித்து வெளியான படம் ‘ரன்’. காதல், ஆக்ஷனில் உருவான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தில் வித்யாசாகர் இசையில் உருவான பாடல்கள் ஹிட் ஆனது. குறிப்பாக ‘காதல் பிசாசே’ மற்றும் ‘இச்சுதா இச்சுதா’ போன்ற பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் பாடப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com