'மெலிசா'வாக நடிக்கும் ருக்மணி வசந்த் - போஸ்டர் வெளியிட்டு அறிவித்த டாக்சிக் படக்குழு

நடிகர் யாஷ் "டாக்சிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார்இப்படத்தில், கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
'மெலிசா'வாக நடிக்கும் ருக்மணி வசந்த் - போஸ்டர் வெளியிட்டு அறிவித்த டாக்சிக் படக்குழு
Published on

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் யாஷ். ராக்கி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் யாஷ்.

இதைத் தொடர்ந்து நடிகர் யாஷ் "டாக்சிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இப்படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்து இருந்தது.

இப்படத்தில், கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரமாண்டமாக இந்த படம் உருவாகி வருகிறது. இப்படம் மார்ச் மாதம் 19-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

யாஷ் , கியாரா அத்வானி, நயன்தாரா ஆகியோரின் கதாபாத்திர பெயர்களுடன் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு அப்டேட் கொடுத்து.

இந்நிலையில், டாக்சிக்' திரைப்படத்தில் 'மெலிசா' என்ற வேடத்தில் ருக்மணி வசந்த் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com