ரூம் பாய்- திரை விமர்சனம்

ரூம் பாய்- திரை விமர்சனம்

யாரும் எதிர்பாராத திருப்பம் படத்திற்கு பெரிய பலத்தை கொடுத்து இருக்கிறது.
Published on
ரூம் பாய்- விமர்சனம்(2 / 5)

கூர்நோக்கு மையத்தில் படித்து வெளியேறும் நாயகன் நிகில், ஏலகிரியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் ரூம் பாயாக வேலைக்கு சேர்கிறார். அங்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் மற்றும் சட்டவிரோத செயல்களை கண்டுபிடிக்கிறார். மேலும் அதற்கான ஆதாரங்களை சேகரித்து விடுதியின் மேனேஜரை கொலை செய்கிறார். இதனால் வில்லன் கும்பலும், மறுபக்கம் போலீஸும் நிகிலை தேட ஆரம்பிக்கிறது.

இறுதியில் வில்லன் கும்பலிடம் நிகில் சிக்கினாரா? மேனேஜரை நிகில் கொலை செய்ய காரணம் என்ன? சட்ட விரோதமாக செயல்படும் வில்லன் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

படத்தில் நாயகனாக நடித்துள்ள அறிமுக நடிகர் நிகில், தனது கதாபாத்திரத்திற்கு தேவையான அதிரடி மற்றும் உணர்ச்சிகளை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். ஆக்‌ஷன் மற்றும் நடன காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

நாயகியாக நடித்த ஹர்ஷாவுக்கு அதிக வாய்ப்பு இல்லாமல், சில காட்சிகளில் மட்டும் தோன்றுகிறார். வில்லன் கதாபாத்திரங்களில் பிரபாகர் தனது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். கூர்நோக்கு மையத்தின் காப்பாளராக நடித்திருக்கும் பிரபாகர் வில்லத்தனத்தை மிரட்டலாக வெளிப்படுத்தியிருக்கிறார். இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு கலை, கற்பகம், கவிதா விஜயன், சமீர், சிட்டி ராஜா ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

இயக்கம்

இயக்குனர் ஜெகன் ராயன், உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு சஸ்பென்ஸ் மற்றும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பாணியில் கதை சொல்ல முயற்சி செய்துள்ளார். திரைக்கதை பல திருப்பங்களுடன் நகர்ந்து, அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை உருவாக்குகிறது. கதாபாத்திரங்களின் பின்னணியையும் தெளிவாக இணைத்துள்ளார். யாரும் எதிர்பாராத திருப்பம் படத்திற்கு பெரிய பலத்தை கொடுத்து இருக்கிறது.

ஔிப்பதிவு

ஒளிப்பதிவாளர் சி.பாரதி ராஜன், பெரும்பாலும் உட்புற காட்சிகளாக இருந்தாலும், கதைக்கு ஏற்ற வகையில் அமைத்துள்ளார்.

இசை

வேலன் சகாதேவன் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை காட்சிகளின் உணர்வை ஓரளவிற்கு கொடுத்து இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com