

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "கருப்பு." பலமுறை இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்தப் படம் வருகிற மே மாதம் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள "கருப்பு" படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த வார இறுதியில் கருப்பு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள "நாங்க நாலு பேரு" பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை நடிகர் சிலம்பரசன் மற்றும் அசல் கோளார் இணைந்து பாடியுள்ளனர்.
பாடலுடன் இந்தப் படத்தில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி நடித்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஆர்.ஜே. பாலாஜி வழக்கறிஞராக நடித்துள்ளார். முன்னதாக இந்தப் பாடலை பாடுவதற்கு நடிகர் சிலம்பரசன் சம்பளம் வாங்கவில்லை என்றும் இதனை அறிந்து நடிகர் சூர்யா, சிலம்பரசனுக்கு தன் சார்பில் அன்பளிப்பு வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.