‘கருப்பு’ பட ட்ரெய்லர்- அப்டேட் வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி

கருப்பு படம் வருகிற 14-ந்தேதி தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.
‘கருப்பு’ பட ட்ரெய்லர்- அப்டேட் வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி
Published on

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "கருப்பு." பலமுறை இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட நிலையில், இந்தப் படம் வருகிற 14-ந்தேதி தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள "கருப்பு" படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதனிடையே, சமீபத்தில் ‘கருப்பு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

இந்நிலையில், கருப்பு’ திரைப்படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில்," டிரெய்லர் தயாராகிக்கொண்டிருக்கிறது. விரைவில் வெளியிடப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com