நினைத்த படி எதுவும் நடக்கவில்லை- திருமணம் குறித்த கேள்விக்கு ரித்விகா பதில்

கடந்த ஆண்டு அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
நினைத்த படி எதுவும் நடக்கவில்லை- திருமணம் குறித்த கேள்விக்கு ரித்விகா பதில்
Published on

பரதேசி, மெட்ராஸ், கபாலி, டி.என்.ஏ. போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ரித்விகா. பிக்பாஸ் 2 சீசனில் பங்கேற்று சிறந்த போட்டியாளராக வெற்றி பெற்றார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இந்நிலையில் ரித்விகாவின் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தது. தற்போது இந்த தகவலை ரித்விகா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நடந்த கேள்வி, பதில் உரையாடலின் போது, ‘ரசிகர் ஒருவர் உங்கள் திருமணத்தில் ஏதும் பிரச்சனையா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ரித்விகா நினைத்த படி எதுவும் நடக்கவில்லை என கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com