

'டாடா' திரைப்படத்தை இயக்கிய கணேஷ் கே.பாபு இயக்கத்தில், ரவிமோகன் நடிப்பில் உருவாகி உள்ளப் படம் கராத்தே பாபு.
இப்படத்தில் நாசர், கே.எஸ். ரவிகுமார், மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர், முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் ஆகஸ்ட் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இப்படம் முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் டீசர், பாடல்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இது ரவிமோகனுக்கு கம்பேக் கொடுக்கும் படமாக அமையும் என கருத்து தெரிவித்திருந்தனர்.