திரிஷா சரியான ரவுடி - ரவி மோகன்

ஆண், பெண் என்ற வித்தியாசம் எல்லாம் இல்லை. செம ஜாலியாக இருப்பார் திரிஷா.
திரிஷா சரியான ரவுடி - ரவி மோகன்
Published on

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ரவி மோகன். ‘சம்திங் சம்திங்’ என்ற படத்தில் திரிஷாவும் அவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் ரவி மோகன் சமீபத்தில் திரிஷா குறித்து அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.

அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திரிஷா ஒரு ரவுடி. அவருக்கு ஆண், பெண் என்ற வித்தியாசம் எல்லாம் இல்லை. செம ஜாலியாக இருப்பார். திடீரென பயங்கரமாக கத்தவும் செய்வார். நிறைய ரவுடித்தனம் செய்திருக்கிறார். ரொம்ப வருடங்களாக அவரை எனக்கு நன்றாக தெரியும்’ என்று கூறியுள்ளார்.

திரிஷாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் ரவி மோகன். இதனால் நட்பின் அடிப்படையில் நகைச்சுவையாக அவர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com