நடிகர் வைபவ்-ன் "ரணம்": டிரெய்லரை ரிலீஸ் செய்த எஸ்.டி.ஆர்

மிதுன் மித்ரா புரொடக்சன்ஸ் சார்பில் மது நாகராஜன் தயாரித்துள்ளார்.ரணம் திரைப்படம் வரும் 23ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
நடிகர் வைபவ்-ன் "ரணம்": டிரெய்லரை ரிலீஸ் செய்த எஸ்.டி.ஆர்
Published on

நடிகர் வைபவ்வின் 25வது படமான ரணம், ஷெரிப் இயக்கத்தில் உருவாகி உள்ளது.

இந்த படத்தில், நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி, பதமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை மிதுன் மித்ரா புரொடக்சன்ஸ் சார்பில் மது நாகராஜன் தயாரித்துள்ளார். அரோள் கரோலி இசையமைத்துள்ளார். ரணம் திரைப்படம் வரும் 23ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில், ரணம் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. டிரெயிலரை நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், "வைபவின் 25வது படமான #ரணம்அரம்தாவரேல் வெற்றி பெற என் அன்பு சகோதரனுக்கு வாழ்த்துகள். நீங்கள் இன்னும் பல மைல்கற்களை விரைவில் எட்டுவீர்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com