தமிழக முதல்வர் விஜய் சார்-க்கு வாழ்த்துகள் - நடிகர் ராம்சரண்

பெத்தி படத்தின் முன்னோட்ட நிகழ்வில் கலந்துகொண்ட ராம்சரன், தமிழக முதல்வர் விஜய்க்கு நன்றியை தெரிவித்தார்.
Actor Ramcharan praises vijay for which he attained as tamilnadu chiefminister
Published on

தமிழ்நாட்டில் கடந்த 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் தோற்றுவித்தார். இதையடுத்து கட்சி ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில், விஜய் தலைமையிலான தவெக கட்சி ஆட்சியமைத்தது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மே மாதம் 10 அன்று சி.ஜோசப் விஜய் பதவியேற்றார். தமிழக தேர்தலில் அவர் ஒரு சிறப்புமிக்க வரலாற்றை அதன்மூலம் ஏற்படுத்தினார்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக தனது அரசியல் வாழ்க்கையில் கவனம் செலுத்துவதற்காக, கடந்த ஆண்டு டிசம்பரில் நடிப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக விஜய் அறிவித்தார். அதன்மூலம் திரையுலகில் தனது நடிப்பு வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைத்தார்.

இந்த நிலையில் பெத்தி படத்தின் வெளியீட்டு முன்னோட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ராம்சரண், தமிழக முதல்வர் விஜய்-க்கு வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது மேடையில் பேசிய அவர், “தமிழ்நாடு முதலமைச்சருக்கு நான் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன். மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், தனது உச்சகட்ட நட்சத்திர அந்தஸ்தை விட்டுவிட்டு மக்கள் சேவை செய்வதற்காக வந்துள்ளார்.

திரையுலகை சேர்ந்தவன் என்ற முறையில், நான் மிகவும் பெருமைப்படுகிறேன். தமிழக மக்களுக்கும் விஜய் சாருக்கும் எனது வாழ்த்துகள்” என்று நடிகர் ராம்சரண் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com