மழையில் நனைகிறேன் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்

டி.சுரேஷ் குமார் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு விஷ்ணு பிரசாத் இசை அமைத்துள்ளார்.இப்படம் வருகிற 12-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளன்று திரையரங்கில் வெளியாகிறது.
மழையில் நனைகிறேன் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்
Published on

பிரபல மலையாள நடிகர் அன்சன் பால். இவர் தமிழில் ரெமோ, சோலோ, 90 எம்எல், தம்பி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் 'மழையில் நனைகிறேன்'. இப்படம் அன்சன் பால் நடிப்பில் தமிழில் 5 வது படமாக உருவாகியுள்ளது.

இந்தப் படத்தை ராஜ்ஸ்ரீ வென்சர்ஸ் சார்பில் பி.ராஜேஷ் குமார் மற்றும் ஸ்ரீவித்யா ராஜேஷ் தயாரித்து இருக்கிறார்கள். டி.சுரேஷ் குமார் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு விஷ்ணு பிரசாத் இசை அமைத்துள்ளார்.

அன்சன் பால் முதன்முதலாக கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரெபோ மோனிகா லேடி கதாநாயகியாக நடித்துள்ளார்.

காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த ஜூலையில் வெளியானது. இப்படம் குறித்து இயக்குனர் டி.சுரேஷ்குமார் கூறியது என்னவென்றால், "மழைக்கும் இந்த கதைக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. மழை ஒரு கதாபாத்திரமாகவே வரும். மழையில் தொடங்கும் படம் மழையிலேயே முடியும். அதனால்தான் படத்திற்கு இந்த தலைப்பு வைத்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.

இப்படம் வருகிற 12-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளன்று திரையரங்கில் வெளியாகிறது. இந்நிலையில் திரைப்படம் வெற்றி பெற நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com