JIO | ஜாலியா இருந்த ஒருத்தன் படப்பிடிப்பு நிறைவு: வீடியோ வெளியிட்ட படக்குழு

இயக்குநர் ராஜேஷ் எம் மற்றும் ஜீவா நடிப்பில் உருவாகி வந்த ஜாலியா இருந்த ஒருவன் (JIO) படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது
JIO படக்குழு
JIO படக்குழு
Published on

கடந்த 2009-ம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான 'சிவா மனசுல சக்தி' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இக்கூட்டணி மீண்டும் "ஜாலியா இருந்த ஒருத்தன்" படம் மூலம் இணைந்துள்ளது.

இப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக இவானா நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். Malik Streams Corporation தயாரிக்கும் இப்படம் பொழுது போக்கு அம்சம் கொண்ட படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இப்படம் கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆகலாம் எனத் தெரிகிறது.

ராஜேஷ் பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படத்தையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com