கிங்டம் படத்தின் Ragile Ragile லிரிக் வீடியோ ரிலீஸ்!

முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார்.திரைப்படம் வருகிற 31-ம் தேதி வெளியாகிறது.
கிங்டம் படத்தின் Ragile Ragile லிரிக் வீடியோ ரிலீஸ்!
Published on

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கிங்டம்' திரைப்படம் இரண்டு பாகமாக வெளியாகும் என தயாரிப்பாளர் நாக வம்சி தெரிவித்துள்ளார். இப்படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது.

திரைப்படம் வருகிற 31-ம் தேதி வெளியாகிறது. படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு அண்டர் கவர் ஸ்பையாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீடு விழா நேற்று ஐதராபாத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. படத்தின் பாடலான ரகிலே ரகிலே லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கிருஷ்ண காந்த் வரிகளில் சித்தார்த் பஸ்ருர் பாடியுள்ளார்.

படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் நேரளவு 2 மணி நேரம் 40 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது. படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி வேகமாக நடைப்பெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com