அட்வான்ஸ் புக்கிங்கில் சாதனை படைத்த 'புஷ்பா 2'

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அட்வான்ஸ் புக்கிங்கில் சாதனை படைத்த 'புஷ்பா 2'
Published on

இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புஷ்பா 2'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.

முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் 'புஷ்பா 2' படம் நாளை வெளியாக உள்ளது. தெலுங்கில் உருவான இந்தப் படம், பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளிலும் வெளியாகிறது. இதனால் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. இதன் மூலம் ரூ.100 கோடி வசூல் செய்து புதிய சாதனையை 'புஷ்பா 2' படைத்துள்ளது.

'புஷ்பா 2' படத்தின் பாடல்கள், ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com