‘புஷ்பா 2’ கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கு - அல்லு அர்ஜுன் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு அல்லு அர்ஜூன் குடும்பத்தினர் ரூ.2 கோடி இழப்பீடு அளித்தனர்.
‘புஷ்பா 2’ பட கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கு - அல்லு அர்ஜுன் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!
Published on

‘புஷ்பா 2’ பட வழக்கு தொடர்பாக ஜூன் 22ம் தேதி, நடிகர் அல்லு அர்ஜூன் ஆஜராக ஹைதராபாத்தில் உள்ள நம்பள்ளி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இதனை பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வந்தார். அவர் முன் அறிவிப்பு இன்றி வந்ததால், அவரை பார்க்க ரசிகர்கள் திரண்டு கட்டுக்கடங்கா கூட்டம் கூடி, அதில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார்.

இதனால் காவல்துறைக்கு முன்னறிவிப்பு கொடுக்காமல் வந்து, கூட்ட நெரிசலுக்கு காரணமான அல்லு அர்ஜுன் உள்ளிட்ட 11 பேர்மீது இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் 23 பேர்மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த 23 பேரில் 19 பேருக்கு நம்பள்ளி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com