வீர தீர சூரன் படத்தின் ப்ரோமோ பாடல் வெளியீடு

சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார். 'வீர தீர சூரன்' படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
வீர தீர சூரன் படத்தின் ப்ரோமோ பாடல் வெளியீடு
Published on

சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது.

டிரெய்லர் காட்சிகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது மேலும் படத்தின் கால அவகாசம் 2.30 மணி நேரமாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

படத்தின் ப்ரோமோ பாடலான அய்லா அலேலா பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடலில் விக்ரம் மற்றும் துஷாரா இணைந்து நடனமாடியுள்ளனர். மிகவும் வைபாக அமைந்துள்ளது பாடல்.இப்பாடலை விவேக் வரிகளில் வேல்முருகன் பாடியுள்ளார். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் பல மாவட்டங்களில் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தை குறித்து ரசிகர்களுக்கு நாளுக்கு நால் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com