தென் கொரியா சுற்றுலாத்துறை தூதராக நடிகை பிரியங்கா மோகன் நியமனம்!

தென் கோரிய அதிபரை பிரியங்கா சந்தித்தார்.
தென் கொரியா சுற்றுலாத்துறை தூதராக நடிகை பிரியங்கா மோகன் நியமனம்!
Published on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் பிரியங்கா மோகன். தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மூலம் கவனம் ஈர்த்தார். தொடர்ந்து தனுஷின் கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

‘நித்தம் ஒரு வானம்’ படத்தின் இயக்குநர் ரா.கார்த்திக் இயக்கத்தில் பிரியங்கா மோகன் நடித்த ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் கடந்த மார்ச் 12-ம் தேதி நேரடியாக நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. பீல் குட் படமாக அமைந்த ‘மேட் இன் கொரியா’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனிடையே கடந்த ஏப்ரலில் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்த தென் கொரிய அதிபருக்கு ஜனாதிபதி மாளிகையில் அளிக்கப்பட்ட விருந்தில், நடிகை பிரியங்கா மோகன் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு தென் கோரிய அதிபரை பிரியங்கா சந்தித்தார்.

இந்நிலையில், ‘மேட் இன் கொரியா’ படத்துக்கு அங்கீகாரம் கொடுக்கும் விதமாக, தென் கொரிய சுற்றுலாத்துறை கௌரவ தூதராக பிரியங்கா மோகனை நியமித்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அவருக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

X

Maalai Malar
www.maalaimalar.com