இயக்குநர், நடிகரை தொடர்ந்து புதிய அவதாரம் எடுத்த பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன் மீண்டும் ஏஜிஎஸ் புரொடக்‌ஷனுடன் இணைவதாகவும், இந்தப் புதிய படத்தை அவரே இயக்கி கதாநாயகனாக நடிப்பதாகவும் கூறப்பட்டது.
பிரதீப் ரங்கநாதன்
Published on

கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘கோமாளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இதனை தொடர்ந்து தானே இயக்கி நடித்த ‘லவ் டுடே’ படம் பெறும் வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது பிரதீப் ரங்கநாதனுக்கு திருப்பு முனையாக அமைந்தது.

இதையடுத்து ‘டிராகன்’, ‘டியூட்’ படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார் பிரதீப் ரங்கநாதன். இப்படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் நடித்த ‘LIK’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதனை தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதன் மீண்டும் ஏஜிஎஸ் புரொடக்‌ஷனுடன் இணைவதாகவும், இந்தப் புதிய படத்தை அவரே இயக்கி கதாநாயகனாக நடிப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதன் தற்போது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். அவர் மமிதா பைஜூ முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும், பெண்களை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கிறார். இத்திரைப்படத்தில் அஸ்வத் மாரிமுத்துவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுமுன்தினம் சென்னையில் தொடங்கியது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com