

'கோமாளி', 'லவ் டுடே', 'டிராகன்' ஆகிய தொடர் வெற்றித் திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் இளம் நட்சத்திரமாக உருவெடுத்துள்ள நடிகர் மற்றும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது.
சமூக வலைத்தள பக்கங்களில், பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் குறித்த மாஸ் போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில் "எதிர்பாராததை எதிர்பாருங்கள்! The next #PR wave begins என்ற கேப்ஷனுடன், நாளை காலை 10:00 மணிக்கு இந்த புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, அவரது அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பெருமளவில் இருந்தது.
பொதுவாகவே இளைய தலைமுறையினரைக் கவரும் வகையில் காமெடி மற்றும் எமோஷனல் கதைகளைத் தேர்ந்தெடுக்கும் பிரதீப், இந்த முறை சயின்ஸ் பிக்சன் அல்லது முற்றிலும் மாறுபட்ட ஒரு ஆக்ஷன் கதையைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாகத் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய திரைப்படத்தை 'லவ் டுடே' மற்றும் 'டிராகன்' போன்ற பிளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனமே மீண்டும் தயாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாளை காலை 10 மணிக்கு படத்தின் டைட்டில், இயக்குனர் மற்றும் கதாநாயகி யார் என்பது போன்ற முழு விவரங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதால் சமூக வலைத்தளங்களில் இப்போதே ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகத் தொடங்கியுள்ளன.