விஜய் ஆண்டனி தயாரித்துள்ள 'பூக்கி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா ‛பூக்கி’ இயக்குகிறார் இப்படத்தில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடிக்கிறார்.
விஜய் ஆண்டனி தயாரித்துள்ள 'பூக்கி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். தற்போது இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிமாணங்களில் கலக்கி வரும் விஜய் ஆண்டனி தற்போது ‛பூக்கி' என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.

சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா ‛பூக்கி' படத்தை இயக்குகிறார். இதில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

2கே தலைமுறை காதலர்களின் ரிலேஷன்ஷிப் பிரச்சினைகளை மையமாக வைத்து கலக்கலான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையில், இப்படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில், 'பூக்கி' திரைப்படம் வரும் பிப்ரவரி 13ம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com