'பரிமளா & கோ'- ஜூலை 10 முதல் ஓடிடியில் வெளியீடு!

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ZEE5-ல் பிரத்யேகமாக ஸ்ட்ரீமாகிறது.
Parimala and co
Published on

இயக்குநர் பாண்டிராஜின் இயக்கத்தில் நடிகர் ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகி பாபு, சாண்டி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனந்திகா சனில்குமார் ஆகியோர் நடித்துள்ள பரிமளா & கோ திரைப்படம் கடந்த ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ஓடிடி வெளியீடு:

இந்நிலையில் இப்படம் ஜூலை 10 முதல் ஓடிடியில் வெளியாகவுள்ளது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ZEE5-ல் பிரத்யேகமாக ஸ்ட்ரீமாக உள்ளது.

ஐந்து மொழிகளில் ஒளிபரப்பு:

பிரபல இயக்குநர் பாண்டிராஜ் எழுதி இயக்கிய இப்படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பசங்க புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஸ்ட்ரீமாகவுள்ளதால், நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் ரசிக்கக்கூடியதாக இருக்கும்.

இப்படம், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் சுவாரஸ்யமான கொலை மர்மம் ஆகியவற்றை கதைக்களத்தை கொண்டது.

பாண்டிராஜின் தனித்துவமான குடும்ப பாசத்தையும், சூழ்நிலை நகைச்சுவையையும், சஸ்பென்ஸையும் இணைக்கும் இப்படம், அனைத்து வயதினருக்கும் மகிழ்ச்சியான திரையரங்கு அனுபவத்தை வழங்குவதாக உறுதியளிக்கிறது.

பிரிமியர் குறித்து ZEE5-ன் தென்னிந்திய மார்க்கெட்டிங் மூத்த துணைத் தலைவர் மற்றும் தமிழ், மலையாளம் வணிகத் தலைவர் லாயிட் சேவியர் கூறியதாவது:-

ZEE5-ல், மொழிகள் மற்றும் பிராந்தியங்களைத் தாண்டி குடும்பங்களின் மனதைத் தொடும் கதைகளை வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நகைச்சுவை, உணர்வு மற்றும் மர்மம் ஆகியவற்றை புத்துணர்ச்சியூட்டும் வகையில் இணைக்கும் முழுமையான பொழுதுபோக்கு திரைப்படத்திற்கு பரிமளா & கோ ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

ஜெயராம் மற்றும் ஊர்வசி தலைமையிலான சிறப்பான நட்சத்திர பட்டாளமும், பாண்டிராஜின் தனித்துவமான கதை சொல்லலும் இணைந்துள்ள இந்தப் படத்தை ஐந்து மொழிகளில் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

சிரிப்பு, மர்மம் மற்றும் குடும்ப கொண்டாட்டம் நிறைந்த ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவத்திற்கு தயாராகுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Parimala and co
X

Maalai Malar
www.maalaimalar.com