

இந்தியில் அறிமுக இயக்குனர் அஷ்வின் குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான படம் 'மகாவதார் நரசிம்மா'.
யாரும் எதிர்பாராத வகையில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றது. தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் படம் வெளியிடப்பட்டது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும்படியாக அமைந்திருந்த இப்படம் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
2026 மார்ச் 15 இல் நடைபெற உள்ள 98வது ஆஸ்கர் அகாடமி விருதுகளுக்கான போட்டியில் சிறந்த அனிமேஷன் திரைப்படப் பிரிவில் தகுதி பெற்ற படங்களில் 'மகாவதார் நரசிம்மா' இடம்பிடித்தது.
ஹாலிவுட் அதிரடி படங்கள் மற்றும் ஜப்பானிய அனிமே தொடர்கள் சிறு வயதிலிருந்தே தன் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் இந்தப் படம் எனது குழந்தைப் பருவ நினைவுகள் மற்றும் நான் பார்த்த படங்களின் பாதிப்பில் உருவானது என்றும் முன்னொரு சந்தர்ப்பத்தில் படத்தின் இயக்குநர் அஷ்வின் குமார் ஒரு சந்தர்ப்பத்தில் தெரிவித்திருந்தார். இந்த படம் தற்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் காணக்கிடைக்கிறது.
மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை விவரிக்கும் வகையில் படத்தின் அடுத்தடுத்த பாகங்களை உருவாக்க திட்டமிடப்பட்டது.
அந்த வகையில் விஷ்ணுவின் 10 அவராதங்களில் இரண்டாவது அவதாரத்திற்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அஸ்வின் குமார் இயக்கும் இந்த ‘மகாவதார் பரசுராம்’ படத்தின் அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது. இந்த படம் 2027ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது.