பராசக்தி படத்தின் 2வது சிங்கிள் "ரத்னமாலா" வெளியாகும் தேதி அறிவிப்பு

ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக பராசக்தி திரைக்கு வருகிறது.
பராசக்தி படத்தின் 2வது சிங்கிள் "ரத்னமாலா" வெளியாகும் தேதி அறிவிப்பு
Published on

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது படம் 'பராசக்தி'. ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.

இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி உள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் திரைக்கு வருகிறது.

இதனிடையே, சமீபத்தில் வெளியான 'பராசக்தி' படத்தின் ப்ரோமோ மற்றும் முதல் பாடலான 'அடி அலையே' ஆகியவை ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து, 'பராசக்தி' படத்தின் 2-வது பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சமீபத்தில் அறிவித்தார்.

அதன்படி, பராசக்தி படத்தின் 2வது பாடல் ப்ரோமோ இன்று மாலை 5.30 மணிக்கும வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்திருந்தது. மேலும், இந்த பாடல் தனக்கு மிகவும் ஸ்பெஷலான பாடல் என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், "பராசக்தி" திரைப்படத்தின் 2-வது பாடல் "ரத்னமாலா" வருகிற 25ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com