பொள்ளாச்சியில் 'பராசக்தி'.. 'மதராஸி'யில் இருந்து நேரே கிளம்பிய சிவகார்த்திகேயன்!

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.‘பராசக்தி’ அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொள்ளாச்சியில் 'பராசக்தி'.. 'மதராஸி'யில் இருந்து நேரே கிளம்பிய சிவகார்த்திகேயன்!
Published on

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அவரது 25-வது படமாக 'பராசக்தி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிக்கிறது.

இந்த படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருகிறதாக தகவல் வெளியானது. சமீபத்தில் இலங்கையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றது. சிவகார்த்திகேயனின் 25வது படமான 'பராசக்தி' அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், 'பராசக்தி' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்று பொள்ளாச்சியில் தொடங்க உள்ளன. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வரும் 'மதராஸி' படத்தின் சில காட்சிகளை நடித்துக் கொடுப்பதற்காக சிவகார்த்திகேயன் சென்றதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து 'மதராஸி' படத்தின் காட்சிகளை முடித்து விட்டு மீண்டும் 'பராசக்தி' படக்குழுவுடன் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com