

அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் அமைப்பு வருடந்தோறும் ஆஸ்கர் விருதுகளை வழங்கி வருகிறது.
ஆஸ்கார் விருது திரைத்துறையின் உயரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மனித உழைப்பிற்கும் படைப்பாற்றலுக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் ஆஸ்கார் அகாடமி அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளது.
அதாவது, ஏஐ படைப்பிகள் இனி ஆஸ்கார் போட்டியில் இடம்பெறாது என அகாடமி அறிவித்துள்ளது.
ஆஸ்கர் விருதுகளுக்கான நடிப்புப் பிரிவில், மனிதர்களால் நேரடியாகச் செய்யப்பட்டு, அவர்களின் ஒப்புதலுடன் திரையில் காட்டப்படும் கதாபாத்திரங்கள் மட்டுமே தகுதியானவை.
AI மூலம் உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள் இந்த பிரிவில் போட்டியிட முடியாது.
அதேபோல திரைக்கதை பிரிவில், திரைக்கதைகள் மற்றும் வசனங்கள் மனிதர்களால் எழுதப்பட்டிருக்க வேண்டும். AI மூலம் உருவாக்கப்பட்ட கதைகள் விருதுகளுக்குப் பரிசீலிக்கப்படாது.
படத் தயாரிப்பில் AI எந்த அளவிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து ஸ்டுடியோக்களிடம் கூடுதல் விளக்கங்களைக் கேட்கும் உரிமை அகாடமிக்கு உண்டு.
ஒரு படத்தின் வெற்றிக்கு மனிதனின் படைப்பாற்றல் எந்த அளவிற்கு ஆதாரமாக இருந்தது என்பதைப் பொறுத்தே அதன் தகுதி நிர்ணயிக்கப்படும்.
ஹாலிவுட் எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்கள் நீண்ட கால போராட்டத்தின் விளைவாக இந்த புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவரை 2027 ஆஸ்கார் விழா முதற்கொண்டு அமலுக்கு வரும். 2026 ஆஸ்கார் விருது விழா கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.