1300 பேரில் ஒரே தேர்வு… சாரா அர்ஜூனின் அதிரடி எழுச்சி

‘துரந்தர்’ படத்தின் 2 பாகங்களும் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், சர்வதேச அளவில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.
1300 பேரில் ஒரே தேர்வு… சாரா அர்ஜூனின் அதிரடி எழுச்சி
Published on

‘துரந்தர்’ படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்காக கிட்டத்தட்ட 1300 பேரிடம் ஆடிஷன் நடத்தப்பட்டது. கடும் போட்டியில் இறுதியாக தேர்வு செய்யப்பட்டவர் சாரா அர்ஜுன்.

ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான இந்த படம், சாராவின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்துள்ளது.

ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான இப்படத்தில், சாரா அர்ஜுனின் நடிப்புத் திறமைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. அந்த நம்பிக்கையை வீணாக்காமல், தனது கதாபாத்திரத்தை உணர்ச்சியோடு வெளிப்படுத்தி பாராட்டுகளை குவித்துள்ளார் சாரா.

தெய்வ திருமகள் படத்தில் விக்ரமுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த சாரா, தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அந்த சிறுமி இன்று ஹீரோயினாக மாறி, பெரிய திரையில் தனது திறமையை மீண்டும் நிரூபித்து வருவது ஆச்சரியமும் பெருமையும் தருகிறது.

‘துரந்தர்’ படத்தின் 2 பாகங்களும் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், சர்வதேச அளவில் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் சாரா அர்ஜுன், தனது இரண்டாவது இன்னிங்சை மிக வலுவாக தொடங்கியுள்ளார்.

ஒன்றரை வயதில் விளம்பர படங்களில் தனது பயணத்தை தொடங்கிய சாரா அர்ஜுன், இன்று 20 வயதில் கதாநாயகியாக உயர்ந்து, இந்திய திரையுலகமே திரும்பிப் பார்க்கும் நடிகையாக வளர்ந்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com