"ஓம்" படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!- மம்மூட்டியை கௌரவித்த இயக்குநர்

இக்கா"வின் வருகைக்காகக் காத்திருங்கள். உங்கள் காத்திருப்புக்கு அது தகுதியானதாக இருக்கும்.
mamooty
Published on

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கி கவுரவித்தது. அந்த வகையில் இந்த வருடம் விருதுகளை அறிவிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார்.

இந்நிலையில் திரைப்படத் துறையில் சாதித்ததற்கான மலையாள சினிமா சூப்பர் ஸ்டார் மம்மூட்டி கடந்த ஜூன் 23அன்று பத்ம பூஷண் விருதினைப் பெற்றார்.

இதனை மேலும் சிறப்பு செய்யும் விதமாக நடிகர் மம்மூட்டி நடித்த "ஓம்" திரைப்படத்தின் ஸ்பெஷல் போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டு கௌரவித்தனர்.

நடிகரின் புதுமுக தோற்றத்தைக்காட்டும் விதமாக இந்த சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது,

நம்முடையவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய சினிமாவுக்கு நடிகர் மாமூட்டி ஆற்றிய மிகச்சிறந்த பங்களிப்பிற்காக மதிப்புமிக்க பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதை முன்னிட்டு, இப்போது ஓம்'
திரைப்படத்தில் "இக்கா"வின்(அண்ணனின்) வருகைக்காகக் காத்திருங்கள். உங்கள் காத்திருப்புக்கு அது தகுதியானதாக இருக்கும். இவ்வாறு மம்மூட்டியை வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.

இத்திரைப்படம் தனுஷ்-ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகியுள்ளது. மேலும் நடிகர் மாமூட்டி, தனுஷ், சாய்பல்லவி, மற்றும் ஸ்ரீலீலா போன்றோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com