Life is Mysterious - ராகவா லாரன்ஸ் நடித்த புல்லட் படத்தின் டீசர் வெளியீடு

இப்படத்தை இன்னசி பாண்டியன் இயக்கியுள்ளார்.படத்தின் இசையை சாம் சி எஸ் மேற்கொண்டுள்ளார்.
Life is Mysterious - ராகவா லாரன்ஸ் நடித்த புல்லட் படத்தின் டீசர் வெளியீடு
Published on

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த காஞ்சனா சீரிஸ் படங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இதனிடையே திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமூக சேவையிலும் ராகவா லாரன்ஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் அடுத்ததாக புல்லட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இன்னசி பாண்டியன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் அருள்நிதி நடிப்பில் வெளியான டைரி திரைப்படத்தை இயக்கியவராவார். படத்தின் இசையை சாம் சி எஸ் மேற்கொண்டுள்ளார்.

இந்த படத்தை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸின் தம்பியான எல்வின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வைஷாலி ராஜ் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.

படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரை நடிகர் விஷால் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். டீசர் காட்சியில் ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் அசம்பாவித சம்பவங்களுக்கு ஏற்கனவே வேறொரு நபருடைய வாழ்வில் தொடர்பு இருக்கிறது என காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராகவா லாரன்ஸ் மற்றும் எல்வின் கதாப்பாத்திரத்திற்கும் என்ன தொடர்பு இருக்கும் என பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com