மீண்டும் படப்பிடிப்பில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா

‘ரணபாலி’ கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டாவும் ஜெயம்மா கதாபாத்திரத்தில் ராஷ்மிகாவும் நடிக்கின்றனர்.
மீண்டும் படப்பிடிப்பில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா
Published on

விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமணம் கடந்த பிப்ரவரி 26-ந்தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பிரமாண்டமாக நடந்தது. திருமணம் முடிந்து ஐதராபாத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய திரை உலகமே திரண்டு வந்து வாழ்த்தியது.

தொடர்ந்து திருமண விருந்து மற்றும் ராஷ்மிகா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருவரும் பங்கேற்று வந்தனர். 1 மாதம் திருமண கொண்டாட்டங்களுக்கு பிறகு விஜய்தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் திருமணத்திற்கு முன்னதாக ஏற்கனவே இருவரும் நடித்து வந்த ‘ரணபாலி’ படப்பிடிப்பில் மீண்டும் பங்கேற்றனர்.

புதுமண தம்பதிகளுக்கு படக்குழுவினர் பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர். படத்தில் ‘ரணபாலி’ கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டாவும் ஜெயம்மா கதாபாத்திரத்தில் ராஷ்மிகாவும் நடிக்கின்றனர்.

19-ம் நூற்றாண்டின் உண்மையான வரலாற்று நிகழ்வுகளை மையமாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் இடம்பெற்ற எந்தையாசாமி பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com