புதிய வருடம் புதிய லைஃப் - தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த தக் லைஃப் படக்குழு

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
புதிய வருடம் புதிய லைஃப் - தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த தக் லைஃப் படக்குழு
Published on

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் கிட்டதட்ட முடியும் கட்டத்தில் இருக்கிறது. திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இன்று தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இப்பாடலிற்கு கமல்ஹாசன் பாடல் வரிகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com