ஓடிடி-யில் வெளியான 'விஜய் 69'

அனுபம் கெர் 500-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.கங்கனா ரணாவத் இயக்கியுள்ள ‘எமர்ஜென்சி’ படத்திலும் நடித்து உள்ளார்.
ஓடிடி-யில் வெளியான 'விஜய் 69'
Published on

பாலிவுட் இயக்குநர் அக்ஷய் ராய் இயக்கத்தில் அனுபம் கெர், சங்கி பாண்டே, வ்ரிஜேஷ் ஹிர்ஜி, மிஹிர் அஹுஜா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தான் 'விஜய் 69'. இது நேரடியாக ஓடிடி தளமான நெட்பிளிக்சில் நேற்று வெளியாகி உள்ளது.

69 வயதான கதாபாத்திரத்தில் அனுபம் கெர் நடித்துள்ளார். விஜய் என்ற 69 வயது முதியவருக்கு சைக்கிளிங் போட்டியின் மேல் அதீத ஆர்வம் இருக்கிறது. அவருக்கு அந்த தடகள விளையாட்டு எந்தளவுக்கு ஃபேவரைட், 69 வயது முதியவரின் கனவு நனவானதா என்பதுதான் இந்த `விஜய் 69' திரைப்படத்தின் கதை. விஜய் என்ற முதியவருக்கு வயது 69 என்பதால்தான் இத்திரைப்படத்திற்கு `விஜய் 69' எனப் பெயரிட்டிருக்கிறார்கள்.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளராக அசத்தி வரும் அனுபம் கெர் 500-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 2022-ம் ஆண்டு வெளியான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. கங்கனா ரணாவத் இயக்கியுள்ள 'எமர்ஜென்சி' படத்திலும் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com