எல்லைகள் கடந்து சாதனை படைக்கும் நயன்தாரா

குடும்பத்தலைவி, குழந்தைகளுக்கு தாய், திரை உலகில் நல்ல கதாநாயகி என பன்முகத்தன்மையுடன் ஜொலித்து வரும் நயன்தாரா தற்போது சல்மான்கானுடன் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
எல்லைகள் கடந்து சாதனை படைக்கும் நயன்தாரா
Published on

திரை உலகில் ஒரு நடிகை திருமணமாகி குழந்தைகள் பிறந்து விட்டால் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குறையும் என்பது எழுதபடாத விதி. ஆனால் தமிழ் திரை உலகில் அந்த விதியையே மாற்றி எழுதியவர் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து இரட்டை குழந்தைகளுக்கு தாயாகி குடும்ப வாழ்க்கையை போல தனது சினிமா மார்க்கெட்டிலும் மதிப்பு குறையாமல் பார்த்து வருகிறார் நயன்தாரா. ஒரு மனைவியாக, தாயாக தனது கடமைகளை செய்யும் நேரத்தில் திரையில் அவர் காட்டும் துடிப்பும், அழகும் இளம் நடிகைகளுக்கு சவாலாகவே இருக்கிறது.

நயன்தாராவிடம் ரசிகர்களுக்கு பிடித்தது எந்த சூழ்நிலையிலும் கலங்காமல் மீண்டும், மீண்டும் எழுந்து வரும் துணிச்சல்தான். வெறும் கவர்ச்சி பொம்மையாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளின் கேரக்டர்களுக்கு வலுசேர்ப்பதும், பொது நிகழ்ச்சிகளில் அவர் காட்டும் கண்ணியமும் திரையில் அவர் வெளிப்படுத்தும் கம்பீரமும் அவரை மற்ற நடிகைகளிடம் இருந்து தனித்து காட்டுகிறது.

வயது என்பது ஒரு ‘எண்’ தான். உழைப்பும், அர்ப்பணிப்பும் இருந்தால் எந்த உயரத்தையும் எட்டலாம் என்பதற்கு நயன்தாரா ஒரு நேரடி உதாரணம். திரை உலகில் எத்தனையோ நடிகர், நடிகைகள் வருகிறார்கள், போகிறார்கள். ஆனால் நயன் என்னும் ஒற்றை மந்திரம் ரசிகர்களின் இதயங்களில் இன்றும் நிலைத்திருக்கிறது. கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை நயன்தாரா எடுத்துள்ள விஸ்வரூபம் திரை உலக சாதனையாக பார்க்கப்பட்டு வருகிறது.

‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானுடன் நடித்தார். படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றதுடன் ரூ.1,200 கோடிக்கு மேல் வசூலை பெற்றது. தொடர்ந்து தமிழ் திரை உலகில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வரும் நயன்தாரா ஒரு தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். குடும்பத்தலைவி, குழந்தைகளுக்கு தாய், திரை உலகில் நல்ல கதாநாயகி என பன்முகத்தன்மையுடன் ஜொலித்து வரும் நயன்தாரா தற்போது சல்மான்கானுடன் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். படத்தை பிரபல இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். எஸ்.வி.சி.63 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படம் அடுத்த 2027-ம் ஆண்டு ரம்ஜான் பண்டிகையையொட்டி திரைக்கு வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் நயன்தாரா கம்பீரமாக பங்கேற்ற காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. மொழிகள் மாறினாலும், தேசங்கள் மாறினாலும் ‘நயன்’ என்ற ஒற்றை மந்திரம் திரை உலக ரசிகர்களின் இதயங்களில் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com