`போதும் சார் போதும்'- கமல் சொன்ன அந்த ஒரு வார்த்தையால் நானி நெகிழ்ச்சி

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் நடிப்பில் வெளியான ஹிட் 3 திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
`போதும் சார் போதும்'- கமல் சொன்ன அந்த ஒரு வார்த்தையால் நானி நெகிழ்ச்சி
Published on

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ஹிட் 3 திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தில் நானி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஹிட் 3 பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது நானி " விருமாண்டி திரைப்படத்தில் அந்த கோர்ட் சீனின் போது அவர் தூங்கி கொண்டு இருப்பார். அவரை தட்டி எழுப்புவார்கள் அப்பொழுது அவர் உண்மையில் தூங்கி எழுபவர் எப்படி செய்வார்களோ அதே முக பாவனைகளை செய்வார். நான் அந்த வீடியோ கிளிப்பை ஒரு 100 தடவை மேல் பார்த்திருப்பேன். அதை இன்ஸ்பைர் செய்து தான் ஹாய் நான்னா திரைப்படத்தில் ஒரு காட்சி நடித்தேன். அவர் யாரிடம் இருந்து இன்ஸ்பையர் ஆகுகிறார் என ஆவல் அதிகம் இருக்கிறது" என கூறினார்.

தற்பொழுது தக் லைஃப் திரைப்பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் " நானி இப்படி குறிப்பிட்டு சொன்னார் என தொகுப்பாளர் கேட்க. " ஆமா நானி இத குறிப்பிட்டாரு நானும் அதை பார்த்தேன். சினிமா என்பது அப்படிதான் இருக்க வேண்டும். நன்றி நானி என்ற சொல்லுக்கு மேல் நான் நானி என்ற பெயரை இங்கு குறிப்பட்டது போதும். நான் மனதில் என்ன நினைக்கிறேன் என மக்கள் புரிந்துக் கொள்வார்கள்" என கூறியுள்ளார்.

இதற்கு நானி அவரது எக்ஸ் தளத்தில் " போதும் சார்.. போதும் " என மிகவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com