தி பேரடைஸ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோவை பகிர்ந்த நானி

தி பேரடைஸ் படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார்.
தி பேரடைஸ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோவை பகிர்ந்த நானி
Published on

நடிகர் நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா மீண்டும் இணைந்துள்ள படம் "தி பாரடைஸ்". 'தசரா' படத்திற்குப் பிறகு நானி-ஸ்ரீகாந்த் ஒடேலா இணையும் இரண்டாவது படம் இது. இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார்.

மோகன் பாபு, ராகவ் ஜுயல், சோனாலி குல்கர்னி மற்றும் சம்பூர்ணேஷ் பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தை SLV சினிமாஸ் தயாரிக்கிறது. 1980-களில் செகந்திராபாத் பின்னணியில் நடக்கும் கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காகப் போராடும் தலைவராக நானி நடித்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியாகும் என்று பின்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான AayaSher பாடல் நாளை (பிப்.24) வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வீடியோவை நடிகர் நானி X தளத்தில் பகிர்ந்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com