

தினந்தோறும் திருப்பதி ஏழுமலையானின் கோவில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகை புரிந்து வருகின்றனர். குறிப்பாக விடுமுறை மற்றும் விசேஷ நாட்களிலும் திருவிழாக்காலங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்படும். அதேபோல் முன்னணி திரைப்பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் தொழிலதிபர்களும் வந்து சுவாமி தரிசனம் செய்து திருவேங்கட பெருமானை தரிசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, அவரது மனைவி அமலா மற்றும் இளைய மகன் அகில் அக்கினேனி ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தனர்.
அகில் அக்கினேனி நடிப்பில் உருவாகியுள்ள 'லெனின்' திரைப்படம் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
முன்னதாக திருப்பதியில் உள்ள நேரு முனிசிபல் மைதானத்தில் இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்காக படக்குழுவினரும் நடிகர் நடிகைகளும் திருப்பதி வந்தனர்.மேலும் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் நாகார்ஜுனா கலந்துகொண்டார்.
இந்நிகழ்வையொட்டி, இத்திரைப்படத்தின் படக்குழுவினருடன் இணைந்து, நடிகர் நாகார்ஜுனா, அவரது மனைவி அமலா மற்றும் இளைய மகன் அகில் அக்கினேனி ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
இன்று காலை நடைபெற்ற விஐபி பிரேக் தரிசனம் மூலம் அனைவரும் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பின்னர் தேவஸ்தான மண்டபத்தில் அவர்களுக்கு, கோவில் ஆர்சகர்கள் பிரசாதங்களையும் ஆசிகளையும் வழங்கினர்.
இவர்களின் வருகை அறிந்த ஏராளமான ரசிகர்கள் மற்றும் பக்தர்கள், கோவிலின் வெளியே ஆரவாரத்துடன் திரண்டனர். பின்னர் மகிழ்ச்சியுடன் கைகளை அசைத்தபடியும் நடிகரின் பெயர்களை குறிப்பிட்டு வணக்கம் தெரிவித்தபடியும் அவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.