முத்தையா முரளீதரனின் வாழ்க்கை வரலாறு படம் "800"-ன் டிரைலரை வெளியிட்டார் சச்சின் தெண்டுல்கர்

இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் முரளீதரன்மும்பையில் நடைபெற்ற சச்சின் தெண்டுல்கர், முரளீதரன், ஜெயசூர்யா பங்கேற்பு
முத்தையா முரளீதரனின் வாழ்க்கை வரலாறு படம் "800"-ன் டிரைலரை வெளியிட்டார் சச்சின் தெண்டுல்கர்
Published on

டெஸ்ட் கிரிக்கெட்டில் அழிக்க முடியாத வரலாற்று சாதனையை படைத்தவர் முத்தையா முரளீதரன். இவர் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். அவரது வாழ்க்கை வரலாறு "800" என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டிரைலரை, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வெளியிட்டார். தொடர்ந்து பேசிய சச்சின் தெண்டுல்கர் ''அவர்களுடன் போதுமான நேரம் செலவழிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். சிறப்பான அம்சம் என்னவென்றால், பல வருடங்களுக்குப் பிறகும் நாங்கள் நல்ல நண்பர்களாகத் தொடர்கிறோம், ஒருவரையொருவர் சகஜமாக ரசிக்கிறோம். நிச்சயம் அனைவரும் படத்தைப் பார்க்கப் போகிறார்கள்.'' என்றார்.

இந்த விழாவில் இலங்கை அணியின் அதிரடி வீரராக திகழ்ந்த சனத் ஜெயசூர்யாவும் கலந்து கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com