கை விலங்குடன் அழைத்து வரப்பட்ட மிருணாள் தாகூர்- அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

கை விலங்குடன் மருணாள் தாகூர் அழைத்து வரப்பட்டதால் ரசிகர்ளிடையே பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் படம் புரோமோஷனுக்காக எனத் தெரிய வந்தால் பரபரப்பு அடங்கியது.
கை விலங்குடன் அழைத்து வரப்பட்ட மிருணாள் தாகூர்- அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்
Published on

தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் மிருணாள் தாக்கூர். தெலுங்கு திரை உலகில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியான மிருணாள் தாக்கூர் பாலிவுட் திரை உலகிலும் அறிமுகமாகி படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டக்காயிட்’ படம் வருகிற 10-ந்தேதி திரைக்கு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி தீவிரமாக நடந்து வருகிறது.

விழாவுக்கு மிருணாள் தாக்கூர் கை விலங்குடன் திடீரென போலீஸ் வேனில் இருந்து இறங்கி வந்தார். இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் படத்தின் புரமோஷன் பணிகளுக்காக அவர் கை விலங்குடன் அழைத்து வரப்பட்டார் என்றதும் ரசிகர்களுக்கிடையே இருந்த பரபரப்பு அடங்கியது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com